குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கிகள்
Posted On:
08 DEC 2022 1:03PM by PIB Chennai
குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தாமதமாகப் பணம் செலுத்த குறு, சிறு தொழில் நிறுவன வசதி கவுன்சில்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்தக் கவுன்சில்களால் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்ட பின் , அது ஒரு வழக்காக மாறும். இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அரசு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
• குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டம், 2006 இன் விதிகள் கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தாமதமாகப் பணம் செலுத்தும் வழக்குகளைக் கையாள்வதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் குறு மற்றும் சிறு தொழில் வசதிக் கவுன்சில்கள் (MSEFCs) அமைக்கப்பட்டுள்ளன. (எம்எஸ்இக்கள்).
• எம்எஸ்எம்இக்கள் அமைச்சகம் 30.10.2017 அன்று சமாதான் இணையப்பக்கத்தை (https://samadhaan.msme.gov.in/MyMsme/MSEFC/MSEFC_Welcome.aspx) அறிமுகப்படுத்தியது.
• தற்சார்பு இந்தியா திட்ட அறிவிப்புக்குப் பின், எம்எஸ்எம்இக்களுக்கு மத்திய அமைச்சகங்கள்/துறைகள்/பொதுத் துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள் மற்றும் மாதாந்திரப் பணம் செலுத்துதல் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக சமாதான் இணையப்பக்கத்திற்குள் ஒரு சிறப்பு துணைப்பக்கத்தை எம்எஸ்எம்இ அமைச்சகம், 14.06.2020 அன்று உருவாக்கியது. மே 2020 முதல் டிசம்பர் 05, 2022 வரை அரசு அமைச்சகங்கள் / துறைகள் / மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் எம்எஸ்எம்இ விற்பனையாளர்களுக்கு ரூ. 1,65,034.09 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
• 2019-20ல் 79 ஆக இருந்த குறு, சிறு தொழில் நிறுவன வசதி கவுன்சில்களின் எண்ணிக்கை 2022-23ல் 113 ஆக அதிகரித்துள்ளது. தில்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவன வசதி கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
*****
AP/SMB/IDS
(Release ID: 1881806)