குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் தொழில்முனைவோர் மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
08 DEC 2022 12:59PM by PIB Chennai
பீகார் உள்ளிட்ட நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள்- ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான கடன் உத்தரவாதத் திட்டம், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்கான திட்டம், கிராமத்தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அண்மையில் பல்வேறு முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது.
எளிதாக வர்த்தகம் செய்யும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கான “உதயம் பதிவு”
ஜூலை 2, 2021 முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை சில்லரை மற்றும் மொத்த வர்த்தகத்தில் இணைப்பு.
இத்தகவலை மக்களவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
**************
AP/IR/RS/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1881805)
வருகையாளர் எண்ணிக்கை : 156