குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்எஸ்எம்இ-க்கள் டிஜி்ட்டல் மயமாக்கல்

Posted On: 08 DEC 2022 12:56PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் தொழில் ஆற்றலை ஊக்குவிப்பதற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் டிஜிட்டல் மயமாக்கலும் அடங்கும். எம்எஸ்எம்இ-க்களுக்கான உதயம், எம்எஸ்எம்இ சாம்பியன்ஸ், ஜெம், உள்ளிட்ட பல்வேறு தளங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் செய்யும் கொள்முதலை கண்காணிப்பதற்காக  எம்எஸ்எம்இ சமா பந்து என்ற தளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டணங்கள் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு எம்எஸ்எம்இ சமாதான்  தளமும் உள்ளது. இதுவரை 1.24 கோடி எம்எஸ்எம்இ-க்கள் உதயம் தளத்தில் பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்> பொது கொள்முதல் கொள்கையின் கீழ், ரூ.95,576 கோடிக்கு எம்எஸ்எம்இ-க்களிடமிருந்து கொள்முதல் செய்துள்ளன.

மக்களவையில், எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை, இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

PKV/KPG/IDS



(Release ID: 1881772) Visitor Counter : 155


Read this release in: English , Urdu