ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2022 4:08PM by PIB Chennai

விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வேக்கு சொந்தம் இல்லாத நிலத்தில் சரக்கு முனையங்களை உருவாக்க, அதனை செயல்படுத்துபவர்கள் இடத்தை அடையாளம் கண்டு ஒப்புதலுக்கு பின்னர் முனையத்தை அமைப்பாளர்கள். ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரயில்வே இடத்தில் முனையங்களை உருவாக்க அந்த இடத்தை ரயில்வே அடையாளம் காண வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் மூலம் முனையத்தைக் கட்டி இயக்க ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார்.

மக்களவையில் இன்று ரயில்வேத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

**************

AP/PKV/AG/IDS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1881456) வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu