தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தபால் துறை நவீனமயமாக்கல்
Posted On:
07 DEC 2022 1:58PM by PIB Chennai
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை, அஞ்சல் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்காக ‘தகவல் தொழில்நுட்ப (ஐடி) நவீனமயமாக்கல் திட்டத்தை’ செயல்படுத்தியுள்ளது.
அனைத்து 25,099 துறைசார் தபால் நிலையங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள 1,29,854 கிளை தபால் நிலையங்களும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. வங்கி, காப்பீடு, அஞ்சல்கள், மனித வளங்கள் மற்றும் நிதி & கணக்குகள் உட்பட அஞ்சல் துறையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் சர்வர் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
வணிகத்தை அதிகரிப்பதற்காக, இத்துறை அதன் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, வாடிக்கையாளர் மற்றும் வணிகத்திற்கு ஏற்றதுபோல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைளை எடுத்துவருகிறது. தபால் துறை அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு பொது சேவைகளை வழங்கி வருகிறது. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் வசதிகள், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள், ரயில் பயணிகள் முன்பதிவு வசதிகள், டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் போன்ற சேவைகளை தபால் துறை வழங்குகிறது. நடப்பு ஆண்டில் ‘தகவல் தொழில்நுட்பம் நவீனமயமாக்கல் திட்டத்தில்’ செய்யப்பட்டுள்ள மொத்த முதலீடு ரூ. 49.57 கோடி (அக்டோபர் 2022 வரை)
1,29,854 கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட 1,54,953 தபால் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு, பல்வகையான அரசு சேவைகளை வழங்குகிறது. 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் மற்றும் 429 பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவை தபால் நிலையங்களில் செயல்படுகின்றன. மேலும், 1,20,196 தபால் நிலையங்கள் பொது சேவை மைய (CSC) சேவைகளை வழங்குகின்றன.
மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. தேவுசின் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
**************
AP/SRI/IDS
(Release ID: 1881418)
Visitor Counter : 162