மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

பொறியியல் பணிகள் தேர்வு, 2021

Posted On: 05 DEC 2022 3:44PM by PIB Chennai

1. பொறியியல் பணித் தேர்வு, 2021-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 28.03.2022 தேதியிட்ட பத்திரிகை குறிப்பின்படி மொத்தம் 194 விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2. பொறியியல் சர்வீஸ் தேர்வு 2021-ன் விதி  13(iv) மற்றும் விதி 13(v)-ன் படி, தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

3. ரயில்வே அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 28 விண்ணப்பதாரர்களுக்கான (17-பொதுப்பிரிவு, 09-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 02-பொருளாதார ரீதியாக நலிவடைந்த வகுப்பினர்காலியிடங்களை நிரப்பலாம் என மத்திய தேர்வாணையம் தற்போது பரிந்துரை செய்துள்ளது.

4. பின்வரும் 4103068 என்ற பதிவு எண் கொண்ட விண்ணப்பதாரர் மட்டும் உத்தேசப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

5. விண்ணப்பதாரர்களின் நியமனம் தொடர்பான முடிவு உத்தேசமானதாக இருப்பதாகவும், தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் ஒரிஜினல் ஆவணங்கள் சரிபார்ப்பு முடியும் வரை முடிவுகள் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇட ஒதுக்கீடு பட்டியலை வெளியிடும் நாள் முதல் அடுத்த 3 மாதங்களுக்கு உத்தேசப்பட்டியல் செயல்பாட்டில் இருக்கும்.  தேவைப்படும் ஆவணங்களை வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கத் தவறினால், தேர்வு செய்யப்பட்டவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இது தொடர்பாக எந்தவொரு தகவல் பரிமாற்றமும் அனுப்பப்பட மாட்டாது.

**************

AP/ES/AG/IDS


(Release ID: 1881007) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi