சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நாளை வாரணாசி செல்கிறார்

Posted On: 02 DEC 2022 4:40PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நாளை (03.12.2022) வாரணாசி செல்கிறார். காசி தமிழ் சங்கமம் என்பது காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவாற்றல் தொடர்பை மீண்டும் கண்டறிந்து கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

 கடந்த 2022, நவம்பர் 19-ந் தேதி அன்று ஒரே பாரதம் உன்னத பாரதம்  என்ற முழக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

 வாரணாசியில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றிருக்கும் பகுதிகளான ஸ்ரீவிசாலாட்சி ஆலயம், ஸ்ரீகுமாரசாமி மடம், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம், ஸ்ரீசக்கரலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சிவமடம் போன்ற இடங்களுக்கு 2022, டிசம்பர் 03-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் திருமதி சீதாராமன் செல்கிறார்.

 2022, டிசம்பர் 04-ந் தேதி அன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், ‘கட்டிடக்கலை மற்றும் இதர பாரம்பரிய வடிவங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் மத்திய அமைச்சர் திருமதி சீதாராமன் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்கிறார். மேலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலாச்சார விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.

காசி தமிழ்சங்கமம் நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் 4 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2022, டிசம்பர் 3,4 தேதிகளில்  மத்திய நிதி அமைச்சரின் பயண நிகழ்வோடு இணைகின்றனர். தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையேயான வரலாற்று, கலாச்சார தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் அவர்களது பயணம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.  

**************

SM/GS/AG/RJ


(Release ID: 1880487) Visitor Counter : 231


Read this release in: English