சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி திரு.சி.அசலேந்தர் ரெட்டி பொறுப்பேற்பு

Posted On: 02 DEC 2022 4:32PM by PIB Chennai

சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான (இந்திய வனத்துறை)  திரு.சி. அசலேந்தர் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேசிய பல்லுயிர் ஆணையம் என்பது, மத்திய அரசின் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும். ஐ.நாவின் உயிரியல் பன்முகத்தன்மைக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தின் தலைவர் பதவி என்பது, மத்திய அரசின், செயலாளர் பதவிக்கு நிகரானது.

1986-ம் ஆண்டு இந்திய வனத்துறை பேட்ச் அதிகாரியான திரு.சி. அசலேந்தர் ரெட்டி, அருணாச்சகல பிரதேசம், கோவா, மிஸோரம், அந்தமான்  மற்றும் நிக்கோபார் திவு அரசுகளில்,  ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.

இவர் 2009 ம் ஆண்டு முதல்  2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்,  தேசிய பல்லுயிர் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

அண்மைகாலமாக ஐதராபாத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மையத்தின் இயக்குநராக திரு.சி. அசலேந்தர் ரெட்டி பணியாற்றினார். தெலங்கானாவின் ஜன்கோன் மாவட்டத்தில் உள்ள எர்ரகோலபஹாத் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த ரெட்டி, ஆந்திர பிரதேச வேளாண் பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்ற பெருமைக்குரியவர்.

***************

SM/ES/RJ



(Release ID: 1880481) Visitor Counter : 204


Read this release in: English