தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கஜுராஹோ கோயில்கள் ஒரு காவியம், ஆழமான தத்துவ அர்த்தங்கள் சிற்பங்களில் பொதிந்துள்ளன
இயக்குனர்கள் டாக்டர். தீபிகா கோத்தாரி மற்றும் ராம்ஜி ஓமின் ஆகியோர் எடுத்துள்ள 60 நிமிட இந்தி ஆவணப்படம் ‘கஜுராஹோ நானாத் அவுர் முக்தி’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கஜுராஹோவில் உள்ள 25 கோயில்களின் இடிபாடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் அவர்கள் உரையாற்றினர்.
கஜுராஹோ கோவில்களில் என்ன இருக்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. வேதக் கடவுள்களின் வெளிப்பாடுகளை அவர்கள் அங்கு கண்டறிந்ததாக ராம்ஜி ஓம் அவர்கள் கூறினார். கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்ட சிற்பங்களில் 33 கோடி இந்துக் கடவுள்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். "இது இந்திய கலையின் கலைக்களஞ்சியம்" என்று அவர் மேலும் கூறினார்.
“கஜுராஹோ கோயில்கள் சிற்றின்ப சிற்பங்களுக்கு பிரபலமானது. ஆனால் சிற்றின்பத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் பல மர்ம மெய்யியல் இதில் உள்ளன” என்று டாக்டர் தீபிகா கோத்தாரி கூறினார்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்திய நாகரிகத்தின் 24 அத்தியாயங்களின் கீழ் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினர் நமது புராதன கோவில்கள் பற்றி அதிகம் தெரியாதவர்களாக டாக்டர் கோத்தாரி தெரிவித்தார். எனவே, கோயிலின் இடிபாடுகளில் வெளிப்படும் நம் நாட்டின் வளமான பண்டைய தத்துவங்களைப் பற்றி இளைய தலைமுறையினருக்குக் கற்பிப்பதற்காக இந்தப் படத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
************
GS / SRI / DL
(रिलीज़ आईडी: 1879659)
आगंतुक पटल : 192