தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ‘சவுதி வெள்ளக்கா’ திரையிடப்பட்டது

Posted On: 27 NOV 2022 10:15PM by PIB Chennai

 “இந்தத் திரைப்படத்தை நீதிமன்ற நாடகம் என்று கூறுவதை விட சமூக நாடகமாகவே படைக்க நான் விரும்பினேன். எனது 2-வது படமான ‘சவுதி வெள்ளக்கா’, 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்படுவதில் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று இந்திய திரைப்படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி கூறினார்.

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பாக  நடத்தப்பட்ட 'டேபிள் டாக்ஸ்' நிகழ்வில் தயாரிப்பாளர் சந்தீப் சேனன் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டார். ‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

 நிலுவையில் உள்ள வழக்குக்காக இருபத்திமூன்று வயது இளைஞன் அபிலாஷ் சசிதரன் நீதிமன்றத்தின் சம்மனை பெறுவதற்கு நீண்ட கால அவகாசத்தை  பின்புலமாக கொண்ட திரைப்படமாகும். இதனால் ஏற்படும் காலதாமதத்தினால் அவருடைய வளைகுடா விசா கனவு  என்னவாகும் என்று அவர் அதிர்ச்சியடைகிறார். இதற்கு பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய ஆசைப்பட்ட அபிலாஷ் சசிதரன், எர்ணாகுளத்தில் உள்ள சவுதி என்ற இடத்தில் இரு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல், மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி, அதில் ஈடுபட்ட அனைவரின் வாழ்க்கையையும் மாற்றியமைத்தது என்பதை அவர் அறிந்து கொள்கிறார்.

 இந்த திரைப்பட அனுபவம் குறித்து தயாரிப்பாளர் சந்தீப் சேனன் கூறும்போது, கொச்சியில் உள்ள சவுதியில்  அண்டை வீட்டாரின் தலையில் ஒரு சிறிய தேங்காய் விழுவதிலிருந்து கதை தொடங்கி மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. இந்த சண்டை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த திரைப்படத்தின் இறுதிகாட்சிகள் மிகவும் சுவாரஸ்யமானது. மொத்தத்தில் 85 வயதான ஒரு மூதாட்டியின் மிகவும் உணர்ச்சிகரமான பயணம் இது”, என்றார்.

நடிகர்/நடிகைகள் தேர்வு குறித்து இயக்குனர் தருண்மூர்த்தி பேசும்போது, “நாங்கள் நடிப்பாற்றல் திறமைகளுடன் கூடிய புதுமுகங்களை தேடினோம்.  நாங்கள் ஒரு தெருவிற்கு சென்று அங்குள்ள மக்களிடம் திரைப்படம் பற்றி விளக்கம் அளித்து நடிக்க வைத்தோம். அதில் சிறந்தவர்களை தேர்வு செய்தோம். அப்படி வந்தவர்கள் தான் பினு பாப்பு மற்றும் லுக்மென் அவரோன் ஆவார்.  பினுவுடன் பணிபுரிவது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. நாங்கள் திரைப்படங்களைப் பற்றி நிறைய விவாதித்து இருக்கிறோம்.  லுக்மெனின் கண்களில் ஒரு அப்பாவித்தனம் எப்பொழுதுமே இருக்கும்.  உணர்ச்சிமிக்க  கண்களைக் கொண்ட ஒரு கலைஞரை   நடிக்க வைப்பது எளிதாக இருந்தது என்றார்.

மூதாட்டியை நடிக்க வைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து தயாரிப்பாளர் சந்தீப் சேனன் கூறும்போது, “இதுபோன்ற சவால்கள் எனக்குப் பழகிப்போன ஒன்று.  ஒரு தயாரிப்பாளராக நான் நினைப்பது என்னவென்றால், நாம் திரைக்கதையுடன் பயணிக்க வேண்டும். அந்த பயணத்திலேயே திரைப்படம்  முழுமையாக உருவாக வேண்டும். திறமை மற்றும் கதைக்களத்தை பொறுத்தவரை மலையாளத் திரையுலகம்  பெரியது என்று சொல்வேன். ஆனால் வியாபாரத்தின் அளவைப் பொறுத்தவரை சிறியதுதான். எனவே நாங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

**************

(Release ID: 1879482)

AP/GS/AG/KRS



(Release ID: 1879534) Visitor Counter : 130


Read this release in: English , Marathi , Hindi