தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஒவ்வொரு மனிதருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது: ஐஎஃப்எஃப்ஐ திரைப்படம் ‘டானிக்’

53-வது சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய பனோரமா பிரிவின் வங்கமொழித் திரையிடப்படமான டானிக் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இயக்குநர், அவிஜித் சென், மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒருவிதமான  ஆதரவு தேவைப்படுகிறது என்பதே படத்தின் மையப்பொருள் என்று கூறினார். அதனால் படத்திற்கு டானிக் என்ற பெயரை தான்  தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

கோவாவில் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வயது முதிர்ந்த தந்தைக்கும், அவரது மகனுக்கும் இடையிலான உறவை  இப்படம் சித்தரிப்பதாகத் தெரிவித்தார். படத்தில் நடித்த நடிகர் தேவ், தற்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அதீத பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருப்பதுடன் தங்களது பெற்றோரின் ஆசைகள், கனவுகள், விருப்பங்களைக் கண்டு கொள்ளாதவர்களாக உள்ளனர் என்று கூறினார்.

இத்திரைப்படம் பெருந்தொற்றுக்கு பின்பு கடந்த ஆண்டு  வெளியிடப்பட்டு திரையரங்குகளில் தொடர்ந்து 111 நாட்களாக வெற்றி நடை போட்டதாக அவர் கூறினார்.

திரைப்படம் பற்றி:

ஜலாதர் சென், ஓய்வு பெற்ற பணியாளர். அவர் தனது 70 வயதைக் கடந்து, மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.  அதிகாரம் மிக்க, அனைத்திலும் உரிமை பாராட்டும் மகனின் செயல்பாடுகள், குடும்பத்துக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுப் பயணத்திற்கு திட்டமிட்ட ஜலாதர், டானிக் என்ற பெயரைக் கொண்ட பயண முகவரை சந்திக்கிறார். அவர் ஜலாதரின் வாழ்க்கையை அதிசயத்தை ஏற்படுத்துகிறார்.வெளிநாட்டுப் பயணம் ரத்தாகிவிட, ஜலாதரும் அவரது மனைவியும் மகனிடம் சொல்லிக் கொள்ளாமல் டார்ஜிலிங் செல்கின்றனர். அங்கு ஜலாதருக்கு சுகவீனம் ஏற்படுகிறது.

----

AP/PKV/KPG/KRS

iffi reel

(Release ID: 1879479) Visitor Counter : 179