தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் “படைப்புகளின் எதிர்காலம்” என்ற அமர்வில் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்டோர் பேச்சு
செயற்கை நுண்ணறிவு, ஏ.ஆர். ரகுமானுக்கு மாற்றாக அமையுமா?
கோவாவில் நடைபெற்று வரும் 53- வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, “நான் செயற்கை நுண்ணறிவு தான்”, என்று அவர் பதிலளித்தார்.
“படைப்புகளின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பேசிய ஏ. ஆர். ரகுமான், மெட்டாவெர்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள், ஒருவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், முழுவதும் செயல்படுவதற்கு வழிவகை செய்யும் என்று கூறினார். தொழில்நுட்பத்திற்கும் மனித மாண்புகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கு மனித சமூகத்தின் அடிப்படை மாண்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்று ஏ. ஆர். ரகுமான் பதில் அளித்தார்.
தமது இசைப் பயணத்தை செயற்கை நுண்ணறிவின் பாதைக்கு ஒப்பாக கூறிய அவர், “எனது பயணத்தை தென்னிந்திய, நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசையுடன் தொடங்கி, அதன் பிறகு ஆப்பிரிக்க மற்றும் ஹாலிவுட் இசைக்கு முன்னேறினேன். மேம்பட்ட தொழில்நுட்பத்தால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அடைவதைப் போல இசையமைப்பாளராக நான் படிப்படியாக முன்னேறி, வளர்ச்சி அடைந்தேன்”, என்று தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களில் பிரபலமான பிரணவ் மிஸ்ட்ரி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல இயக்குநர் சேகர் கபூர் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்து கொண்டு பேசினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1879426
**************
(Release ID: 1879426)
AP/RB/RR
(Release ID: 1879478)
Visitor Counter : 187