தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

படப்பிடிப்பு நடத்த இந்திய திரைப்படத்துறையினருக்கு உஸ்பெகிஸ்தான் சிவப்பு கம்பள வரவேற்பு

உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவதற்கு இந்தியத் திரைப்படத்துறையினருக்கு அந்நாட்டு அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

கோவாவில் நடைபெறும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உஸ்பெகிஸ்தான் ஒளிப்பதிவு முகமையின் தலைமை இயக்குநரின் ஆலோசகர் டாக்டர்  பர்னோ உங்குபோயேவா தெரிவித்தார்.

தாஷ்கண்ட் திரைப்படவிழாவில் பாலிவுட் படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றும், இந்தி திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, வங்கமொழித் திரைப்படங்களுக்கும் தாங்கள் வரவேற்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் திரைப்படத் தயாரிப்பு போட்டிக்கு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மாணவர்களுக்கு உஸ்பெகிஸ்தான்  அழைப்பு விடுத்ததை சுட்டிக்காட்டிய அவர், அடுத்த  திரைப்படவிழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா வந்தனா ஆகியோரது படங்களை திரையிடுவதற்கு அழைத்துள்ளதாகக் கூறினார்.

தங்கள் நாட்டில் பாலிவுட் படங்களுக்கும், இந்தி திரைப்படப் பாடல்களுக்கும் பெரும் வரவேற்பு இருப்பதாக, பர்னோவுடன், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உஸ்பெகிஸ்தான் இயக்குநர்  கிலால்  நாசிமோவ் கூறினார். இந்திய இசையையும், ராஜ்கபூர்,  ஹேமமாலினி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் இந்திய படங்களையும் விரும்பி பார்த்தும் கவனித்தும் தாங்கள் வளர்ந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திப் படங்கள் எங்கள் வாழ்க்கையுடன் இணைந்தவை என்று அவர் கூறினார்.

இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் உஸ்பெகிஸ்தானில்  படப்பிடிப்பு நடத்தவும் அந்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து படங்களை தயாரிக்கவும் வேண்டும் என அழைப்பு விடுத்த உஸ்பெகிஸ்தான் தயாரிப்பாளர் அட்டாபெக் கோட்ஜியேவ், இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவாக வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ரவீந்தர் பாக்கர்,  இந்த ஆண்டு நடைபெற்ற 14-வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமையேற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-----

(Release ID: 1879424)

AP/PKV/KPG/KRS

iffi reel

(Release ID: 1879477) Visitor Counter : 173
Read this release in: English , Urdu , Hindi , Marathi