தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வணக்கத்துக்குரிய இரண்டு படைப்பாளிகள் மட்டுமே உள்ளனர் - வாய்ப்பு மற்றும் ஒளி" : புகழ்பெற்ற மூத்த ஒளிப்பதிவாளர் திரு அனில் மேத்தா

Posted On: 27 NOV 2022 6:26PM by PIB Chennai

வணக்கத்துக்குரிய இரண்டு படைப்பாளிகள் மட்டுமே உள்ளனர் - வாய்ப்பு மற்றும் ஒளி"

"கண்டு உணரும் வரை புறநிலை யதார்த்தம் புரிவதில்லை"

"கண்டு உணரும் ஆற்றல் அந்த யதார்த்தத்தை உருமாற்றுகிறது"

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட திரு அனில் மேத்தா, "ஒரு ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையை வரையறுக்கும் கோட்பாடுகள்" எனப் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள் இவை.

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நிகழ்வில், 'வழிகாட்டி விளக்குகள்' என்ற தலைப்பில் பேசிய திரு அனில் மேத்தா, பிம்ப வடிவமைப்புகளே ஒளிப்பதிவாளர்களை ஈர்க்கும் என்று விளக்கினார்.

நடைமுறையில், ஒளிப்பதிவு என்பது பிம்ப வடிவமைப்பு மாறுபாடுகள், சந்தர்ப்பங்கள், பகுப்பாய்வுகள் மற்றும் தனிப்பட்ட தேர்வுகளால் வழிநடத்தப்படுகிறது என்றார்.

திரு மேத்தாவின் சிறந்த படைப்புகளில், லகான் (2001), சாத்தியா (2002), கல் ஹோ நா ஹோ (2003), வீர்-ஜாரா (2004), கபி அல்விதா நா கெஹ்னா (2006) மற்றும் ஏ தில் ஹை முஷ்கில் (2016) ஆகியவை அடங்கும்.

ஒளிப்பதிவாளரின் மொழிகளே வேறு வடிவம் கொண்டது என்று கூறிய அவர், பெயரளவிற்கு காட்சிப்படுத்துவது உண்மையில் ஒளிப்பதிவு அல்ல என்றார்.

 

எதிர்கால ஒளிப்பதிவாளர்களுக்கு அவரது மிகவும் மதிப்புமிக்க ஆலோசனைகள்:

"இயக்குனருடன் உங்கள் உரையாடல்களை ஒளிவு மறைவு இன்றி, திறந்த முறையில் நீங்கள் தொடங்க வேண்டும். அது பெரும்பாலும் கேட்டு உணர்வது சம்பந்தப்பட்டதாகும். இருப்பினும் நீங்கள் நிறைய பேருடன் பேசி, உங்கள் படைப்பாற்றல் வளங்களை  ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு ஸ்கிரிப்டைப் படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து கேமராவை எப்படி வைப்பது என்று சிந்திக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறிய திரு அனில் மேத்தா தனிப்பட்ட முறையில் ஸ்டோரிபோர்டை உருவாக்க விரும்பவில்லை. உங்களுக்கு படமாக்கப்படும் காட்சி அமைப்பு தொடர்பான கற்பனை உணர்வு இருந்தால், உங்கள் வேலை பாதி முடிந்துவிட்டது என்றும் காட்சி அமைப்பு தொடர்பான மனவோட்டம் என்பது ஒளிப்பதிவாளர் மட்டுமே உணரக்கூடிய ஒன்று என்றும் அவர் கூறினார்.

**************

SM / GS  / DL



(Release ID: 1879419) Visitor Counter : 176


Read this release in: Hindi , English , Marathi , Urdu