தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

சிக்கலான உறவுகளால் பின்னப்பட்டு, தங்க மயில் விருதுக்கு போட்டியிடும் கோல்ட் ஏஸ் மார்பிள் திரைப்படம்

பெரும்பாலும் உருவகப்படுத்துவதைப் போல வாழ்க்கை சிக்கலானதாக இருந்தால், சமூக விதிமுறைகளும் காயப்பட்ட உறவுகளும்  இணைந்து  கடுமையான புதை மணலாக வாழ்க்கையை மாற்றக்கூடும். தொடர் தோல்வியை சந்திக்கும் கலைஞர் அக்பர், அவரது தோழி மற்றும் தந்தை ஆகியோர் சம்பந்தப்பட்ட கோல்ட் ஏஸ் மார்பிள் (Cold as Marble) என்ற திரைப்படத்தின் வாயிலாக இந்த கசப்பான உணர்வு கோவாவில் நடைபெற்று வரும் 53- வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதிநிதிகளைச் சென்றடைந்துள்ளது. அசர்பைஜான் நாட்டின் இயக்குநர் ஆசிஃப் ரஸ்தமோவ் இயக்கியுள்ள இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதுக்கு போட்டியிடுகிறது.

 

கோவாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பிரமுகர்களுடன் கலந்துரையாடுகையில், திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓக்டே நமசோவ் இந்த படம் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பழமைவாத சமூகத்தில் உள்ள உறவுகளில் நிலவும் சிக்கல்களை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்க முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரைப்படத்தில் அக்பரின் தோழியாக நடித்துள்ள நடிகை நடுவன் அப்பாஸ்லியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

 

**************

SM / BR / DL

iffi reel

(Release ID: 1879297) Visitor Counter : 174
Read this release in: Urdu , English , Hindi