தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இண்டராக்சன்’ திரைப்படத்தின் ஆசிய பிரீமியர் காட்சி
ஆர்ட் ஆப் தி வோர்ல்ட் அண்மையில் தயாரித்த இன்டராக்சன் என்ற திரைப்படம் 12 குறும்படங்களின் தொகுப்பு ஆகும். இத்திரைப்படம் கோவாவில் நடக்கும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவிலேயே முதல் முறையாக (பிரீமியர் காட்சி ) திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட 12 சிறுகதைகள் உள்ளன. மொராக்கோ, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஆர்மீனியா, சுவிட்சர்லாந்து, புர்கினா பாசோ, மெக்சிகோ, அமெரிக்கா, கிரீஸ் ,இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன.
படத்தின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரூபேஷ் குமார், 12 திரைப்படங்கள் விலங்கு துஷ்பிரயோகம், வன அழிப்பு, பருவநிலை மீதான தீவிர தாக்கம், விலங்குகளின் வாழ்விட அழிவு, கடல் வாழ்க்கை மாசுபாடு போன்ற பல்வேறு தலைப்புகளை ஆராய்கின்றன என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மனபேந்து ராத் கூறுகையில், பருவநிலை மாற்றம் குறித்த ஒரே ஒரு தெளிவான செய்தியை அதிகபட்ச மக்களை சென்றடைவதே இந்த முயற்சி என்றார்.
12 சிறுகதைகளில், காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க மனிதகுலத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.
படத்தின் தயாரிப்பு ஆலோசகர் புரோட்டிக் மஜூம்தார் கூறுகையில், தென்னிந்தியாவில் கேரளாவில் உள்ள வயநாடு காடுகளில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் கண்களால் மனித-விலங்குகளின் தொடர்பு பற்றிய கதையை The Elephant in the Room விவரிக்கிறது. இந்த யானைகளுடன் வளரும் குழந்தைகள், ஒரு சிறப்புப் பிணைப்பை வளர்த்து, காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் போது மனித - காட்டு விலங்கு மோதலைத் தீர்ப்பது எப்படி என்று விளக்குகிறது.
ஆர்ட் ஆப் தி வோர்ல்டு ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல் துறையுடன் தொடர்புடைய ஒரு அரசு சாரா அமைப்பாகும். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
**************
SM / PKV / DL
(Release ID: 1879295)
Visitor Counter : 163