தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
"மெக்சிகன் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வலியை திரையில் காட்ட விரும்பினேன்": இயக்குனர் நடாலியா லோபஸ் கல்லார்டோ
கோவாவில் நடைபெற்று வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவகம் ஏற்பாடு செய்திருந்த 'டேபிள் டாக்' நிகழ்ச்சியில் பேசிய ‘மாண்டோ டி ஜெமாஸ்’ (ரத்தினங்களின் மேலங்கி) திரைப்படத்தின் இயக்குனர் நடாலியா லோபஸ் கல்லார்டோ, "பொருள் கடத்தல்கள், கொலைகள், ஆட்கடத்தல் போன்ற வன்முறையின் அனைத்து வெளிப்பாடுகளையும், உளவியல் பார்வையில் நான் சித்தரிக்க விரும்பினேன். எங்களை ஒன்றிணைக்கும் அனைத்து மெக்சிகன் மக்களும் சுமக்கும் வலியை திரையில் காட்ட விரும்பினேன்.”, என்று கூறினார்.
இந்த மெக்சிகன் த்ரில்லரின் தயாரிப்பாளர் ஜோக்வின் டெல் பாசோ கூறுகையில், "இந்தத் திரைப்படத்திற்காக நடாலியா என்னை அணுகியபோது, அது படத்தின் கதாபாத்திரங்களில் ஒருவரான இசபெல்லின் கதையாக மட்டுமே இருந்தது. பல்வேறு மாற்றங்களுக்கு பின் நடாலியா இந்த கதையை அதன் தற்போதைய வடிவத்திற்கு மாற்றினார்” என்று கூறினார்.
இயக்குனர் நடாலியா லோபஸ் கல்லார்டோவின் கூற்றுப்படி, இந்த திரைப்படத்தின் தலைப்பு அவர் படித்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஒரு தொடர்மொழியில் இருந்து வந்தது. அந்த "உண்மை என்பது ரத்தினங்களின் அங்கி போன்றது, ஒவ்வொரு ரத்தினத்திலும் மற்றவை பிரதிபலிக்கின்றன.", எதுவே அந்த தொடர்மொழி.
கேமரா இயக்கத்தை வேண்டுமென்றே கட்டுப்படுத்த முயன்றீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர், ஒரு நிலையான பார்வையாளராக நாம் சோகங்களை எவ்வாறு கவனிக்கிறோம் என்பதைப் பிரதிபளிக்கவை இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெளிவுபடுத்தினார்.
சில திரைப்பட ஆர்வலர்கள் கிளைமாக்ஸ் குறித்தும் விளக்கம் கேட்டனர். பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான எல்லையை அழிக்க முயன்றதாக இயக்குனர் தெளிவுபடுத்தினார்.
மாண்டோ டி கெமாஸ் (ரத்தினங்களின் மேலங்கி) கதை கிராமப்புற மெக்சிகோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெவ்வேறு சமூக வகுப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் காணாமல் போன ஒரு நபரின் வழக்கில் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்துடன் இணைக்கப்படுகின்றனர். இது மெக்சிகோவில் மிகவும் சாதாரணமாக நடந்துக்கொண்டு இருக்கும் ஒரு விஷயமாகும்.
கதை சுருக்கம்:
சுமுகமாக விவாகரத்து வாங்கியப்பின், இசபெல் தனது குழந்தைகளுடன் நகரத்தை விட்டு தனது கிராமத்து வீட்டிற்கு செல்கிறாள். அவளுடைய வீட்டுப் பணிப்பெண்ணான மரியாவின் சகோதரி காணாமல் போனது அவளுக்கு தெரிய வருகிறது. அவளை கண்டுப்பிடிக்க இசபெல் உதவி செய்ய விரும்ப,இரு பெண்களும் காணாமல் போன அவளை கண்டுபிடிக்க திட்டம் இடுகின்றனர். இதற்கிடையில், போலீஸ் கமாண்டர்-இன்சார்ஜ் ராபர்ட்டா தனது மகனை திருத்தி கொள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார். மொத்த கிராமாமும் ஆபத்தானவர்களால் சூழ்ந்தபோதிலும் இவர்கள் தங்கள் இலக்கை அடைய உறுதியோடு போராடுகின்றனர்.
நடிகர்கள் & குழுவினர்:
இயக்குனர்: நடாலியா லோபஸ் கல்லார்டோ
தயாரிப்பாளர்: பெர்னாண்டா டி லா பெசா, ஜோக்வின் டெல் பாசோ, நடாலியா லோபஸ் கல்லார்டோ
திரைக்கதை: நடாலியா லோபஸ் கல்லார்டோ
ஒளிப்பதிவாளர்: அட்ரியன் துராசோ
ஆசிரியர்: நடாலியா லோபஸ் கல்லார்டோ, ஓமர் குஸ்மான் காஸ்ட்ரோ, மிகுவல் ஷ்வெர்ட்ஃபிங்கர்
நடிகர்கள்: நைலியா நார்விந்த், அன்டோனியா ஒலிவாரெஸ், ஐடா ரோவா, ஜுவான் டேனியல் கார்சியா, ஷெர்லின் ஜவாலா
**************
PKV / SRI / DL
(Release ID: 1879179)
Visitor Counter : 167