சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Posted On: 26 NOV 2022 5:15PM by PIB Chennai

ஓஷன்சாட்-3 என்று அறியப்படுகின்ற புவிகண்காணிப்பு செயற்கைக்கோள்-6 மற்றும் நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 செலுத்துவாகனம் ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து  நவம்பர் 26 அன்று காலை மணி 11.56-க்கு வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தப்பட்டது.

ஓஷன்சாட் தொடரில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் -6 என்பது 3-ம் தலைமுறை செயற்கைக்கோள் ஆகும். பூட்டானுக்காக செலுத்தப்பட்ட இஸ்ரோ நானோ செயற்கைக்கோள்-2 (ஐஎன்எஸ்-2பி), ஆனந்த், ஆஸ்ட்ரோ காஸ்ட் (4 செயற்கைக்கோள்கள்), தைபோல்ட் (2 செயற்கைக்கோள்கள்) ஆகியவை 8 நானோ செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த செலுத்து வாகனம் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளையும், இதர 8 நானோ செயற்கைக்கோள்களையும் பல்வேறு சுற்று வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தியதன் மூலம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் மீண்டும் ஒருமுறை அதன் திறனை நிரூபித்துள்ளது.

***************


(Release ID: 1879113)
Read this release in: English