தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
ஒருவரது பிறந்தநாளில் மெழுகுவர்த்திகள், கேக், வெளிச்சம் மற்றும் நண்பர்கள் என இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஜிம்மி தனது 45வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கடற்கரை இல்லத்தில் கொண்டாடுகிறார். கேக் வெட்டிய பிறகு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது.
ஆர்டுரோ மாண்டினீக்ரோ இயக்கிய பர்த்டே பாய் (கம்ப்ளேனெரோ) (2022) பனாமியன் த்ரில்லர் திரைப்படமாகும். கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது ‘டேபிள் டோக்ஸ்’ நிகழ்ச்சியில் தனது திரைப்படத்தைப் பற்றிப் பேசிய , ஆர்டுரோ மாண்டினீக்ரோ, உலகில் தற்கொலைகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்டார். “பர்த்டே பாய் நட்பைப் பற்றி பேசும் படம்” என்று அவர் கூறினார்.
படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரி ஜே பேரியண்டோஸும் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். “படத்தின் கருப்பொருள் பற்றிய யோசனை தொற்றுநோய் காலங்களில் உருவானது. நாங்கள் பெரிய அளவில் மரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கதாநாயகனுக்கு கண்டறியப்பட்ட அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் பற்றி படம் பேசுகிறது. இந்த படத்தின் கருப்பொருள் முன்னர் தொடப்படாதது" என்று அவர் கூறினார்.
இப்படம் இந்த ஆண்டு அகாடமி விருதுகளுக்கான போட்டியில் உள்ளது.
**************
SM / PKV / DL
(Release ID: 1878957)
Visitor Counter : 173