சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை / திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் - இந்திய உணவுக் கழகம் - சென்னை மண்டல அலுவலகம், தகவல்

Posted On: 25 NOV 2022 7:57PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- இந்திய உணவுக் கழகம், உணவுக் கொள்கையின் பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உணவுக் கழகச் சட்டம் 1964ன் கீழ் உருவாக்கப்பட்டது:

• விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள விலை நிர்ணயித்தல்

• பொது விநியோக முறைக்காக உணவு தானியங்களை நாடு முழுவதும் விநியோகித்தல்.

• தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு தானியங்களின் செயல்பாடு மற்றும் தேவைக்கான இருப்புகளின் திருப்திகரமான அளவைப் பராமரித்தல்.

 

இந்தியாவை நெருக்கடி மேலாண்மை சார்ந்த உணவுப் பாதுகாப்பிலிருந்து ஒரு நிலையான பாதுகாப்பு அமைப்பாக மாற்றுவதில், FCI தொடக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

FCIயின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 LMT சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 LMT சேமிப்பு திறன் கொண்ட சைலோ உள்ளது.

இக்கிடங்குகள் முலம், சென்னை / திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் அரிசி/கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா/ தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி/கோதுமை ரயில்/சாலை வழியாக பெறப்படுகிறது.

ஒரு வருடத்தில், தோராயமாக இப்பிரிவின் மூலம் 80 முதல் 100 ரேக்குகள், 2.5 LMT அளவுக்கு கையாளப்படுகிறது.

சென்னை பிரிவு, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு, 1.9 LMT அரிசி மற்றும் 0.17 LMT கோதுமையை இலவசமாக வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை/திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 லட்சம் மக்கள் பிரதி மாதம் பயன் பெறுகின்றனர்.

2021-22ல் செறிவூட்டப்பட்ட அரிசி (FRK) விநியோகம் தொடங்கப்பட்டது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சமாளிக்க பெரிதும் உதவும் என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் [NIN] தெரிவித்துள்ளது. இதன்படி, MDM மற்றும் WBNP [ICDS] திட்டத்தின் கீழ் 8883 MT செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டுள்ளது.

திட்ட வாரியான விநியோக விவரங்கள்: 2021-22

2021-22

Total Issued (in MTs)

Scheme

2021-2022

2022 (Till date)

NFSA

43930

21887

PMGKAY

127496

95711

MDM

2683

3284

WBNP

8154

3184

Defence

840

120

Total

183103

124186

மொத்தம் வழங்கப்பட்டது (MT)

FCI உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் அனைத்து செயல்பாடுகளை மேம்படுத்த டிப்போ ஆன்லைன் சிஸ்டம்[DOS] செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மைக்காக நிகழ் நேரத் தரவைப் DOS பிடிக்கிறது.

தொலைதூர இடத்திலிருந்து கிடங்குகளை கண்காணிக்க, சி சி டி வி [CCTV] கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. FCI கிடங்குகளில் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து குடோன்களிலும் சிசிடிவி நேரலை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கிடங்குகளும், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (WDRA)ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. FCI இல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி/கோதுமையின் தரம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. உணவு தானியங்கள், FSSAI விவரக்குறிப்பை பின்பற்றி பொது விநியோகத்திற்கு TNCSC வாயிலாக வழங்கப்படுகிறது என இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


(Release ID: 1878944) Visitor Counter : 231


Read this release in: English