குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்திய பெருங்கடலில் அண்டை நாடுகளாக இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இருக்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்
Posted On:
25 NOV 2022 5:17PM by PIB Chennai
இந்தியா ஆப்பிரிக்கா இடையே நாகரிக தொடர்பும் பகிரப்பட்ட வரலாற்று ரீதியான பிணைப்பும் இருப்பதாக தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இந்திய பெருங்கடலில் நாம் அண்டை நாடுகளாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
கிரேட்டர் மைடாவில் இன்று யுனெஸ்கோ-இந்தியா-ஆப்பிரிக்கா ஹேக்கத்தானின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளால் வளர்க்கப்பட்டுள்ள நெருக்கமான உறவுகளை பிரதிபலிப்பதாக கூறினார். இவை ஒத்துழைப்பின் உணர்வை வளர்த்து மனித குலம் சிறப்புற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்து வருவதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். உலகளாவிய இந்த ஹேக்கத்தான் சிறந்த உலகத்தை உருவாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வரமுடியும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் மத்திய அரசின் கல்வித்துறையின் புதிய கண்டுபிடிப்பு பிரிவு, ஏஐசிடிஇ, யுனெஸ்கோ ஆகியவற்றால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த 36 மணி நேர ஹேக்கத்தானில் இந்தியா மற்றும் 22 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஈடுபட்டனர். சமூக, சுற்றுச்சூழல், தொழில்நுட்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுமார் 600 இளம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.
ஹேக்கத்தானின் வெற்றியாளர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், மத்திய கல்வியமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
*********
AP/SMB/RJ/KRS
(Release ID: 1878920)