தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாளைய 75 இளம் படைப்பாளர்களுக்கான’ ’53 மணி நேர சவால்’ ‘இந்தியா@100’ என்ற தலைப்பில் ஐந்து அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளது
நாளைய 75 இளம் படைப்பாளர்களின் இரண்டாம் பதிப்பு இன்று “53 மணி நேர சவால்” என்ற போட்டியின் விருது வழங்கும் விழாவுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 75 இளைஞர்கள் ‘இந்தியா@100’ என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் குறும்படங்களைத் தயாரிக்க வேண்டும்.
இந்த போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நவம்பர் 21 அன்று தொடங்கி வைத்தார். ஷார்ட்ஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் இந்த போட்டியை நடத்தியது. போட்டியின் இறுதிக்கட்டம் இன்று நடைபெற்றது.
53 மணிநேரத்தில் 5 குறும்படங்கள் உருவாக்கப்பட்டன. படப்பிடிப்பிலிருந்து இறுதிப் படத்தை வெளிக்கொண்டுவரும் வரை, திரைப்பட இயக்குனர்கள் தங்களுடைய கதைக்கு உயிர் கொடுக்க இடைவிடாமல் உழைத்தனர்.
வெற்றி பெற்ற அணி டீம் பர்பில் ஆகும். அதன் திரைப்படமான ‘டியர் டைரி’, தனது சகோதரியை சந்திக்கும் போது, தனது கடந்தகால மன காயங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு பெண்ணின் கதையை வழங்கியதற்காக நடுவர்களின் பாராட்டை பெற்று இத்திரைப்படம் இந்த போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற இப்படம், எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி ஒரு புதிய இயல்பு நிலையாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, இசையமைப்பு, பின்னணிப் பாடல், அனிமேஷன், திரைக்கதை எழுதுதல், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, தொகுப்பு, கலை வடிவமைப்பு போன்ற சினிமாவின் பல்வேறு துறைகளில் உள்ள திறன்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட 15 பேர் இந்த குழுவில் பணியாற்றியுள்ளனர். 53 மணிநேரத்தில் ஒரு படத்தை வெற்றிகரமாக தயாரித்ததற்காக இந்த அணிக்கு ரூ. 2,25,000 மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
மற்ற நான்கு படங்கள் இதோ.
டீம் ஆரஞ்சின் அந்தர்த்ரிஷ்டி (தி இன்சைட்) பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராத ஒரு மனிதனைப் பற்றியது. அவர் வெளி உலகத்தையும் வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இத்திரைப்படம்
டீம் யெல்லோவின் ‘தி ரிங்’ திரைப்படம் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்டது. அவள் ஏற்றுக்கொள்ளாத பாரம்பரியம் அவளிடம் திணிக்கப்படும் அவள் தான் யார் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணத்தை இத்திரைப்படம் கட்டியுள்ளது.
டீம் கிரீன் எடுத்துள்ள ‘அட்மொஸ்ட்’ திரைப்படம் ஒரு குழந்தைக்கு தந்தை மற்றும் தாய் இருவரும் இருக்க முடியும் என்று கண்டறியும் ஒரு இளம் பெண்ணின் கதை.
டீம் பிங்க் ‘சௌ கா நோட்’ என்று திரைப்படத்தை வழங்கியது. பணம் வழக்கற்றுப் போய்விட்ட உலகத்தில், ஒரு குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டை எப்படிப் பயன்படுத்துவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
ஐந்து படங்களும் 2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஷார்ட்ஸ் டிவியில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும். பின்னர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்யப்படும்
இந்த போட்டியை குறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், சுதந்திரத்தின் அம்ரித திருவிழாவை கொண்டாடி, இந்தியா சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளை நோக்கி பயணிக்கும்போது, இந்தியா முழுவதிலுமிருந்து 75 இளம் திரைப்பட இயக்குனர்கள் 53 மணிநேர சவாலின் மூலம் தங்களின் திறன்களை காண்பிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
**************
PKV / SRI / DL
(Release ID: 1878680)