தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தோல்வி அடைவது நிகழ்வு மட்டுமே, நபர் அல்ல: மாஸ்டர் கிளாஸ் அமர்வில் நடிகர் திரு அனுபம் கெர் பேச்சு
“நடிகர்களாக எவரும் பிறப்பதில்லை. முதன் முதலில் பள்ளி நாடகத்தில் எனது நடிப்பு மிக மோசமாக இருந்தது. எனினும் எனது முயற்சியைப் பாராட்டி என் தந்தை பூங்கொத்துகளை அன்பளிப்பாக வழங்கினார்”, என்று பிரபல நடிகர் திரு அனுபம் கெர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு “திரைப்படம் மற்றும் நாடகத்திற்கான செயல்பாடு” என்பது குறித்து நடைபெற்ற மாஸ்டர் கிளாஸ் அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.
சாதாரண பின்னணியை சேர்ந்தவராக இருந்த போதிலும், நடிகராக வெற்றி பெற்றது குறித்த தம் அனுபவங்களை திரு அனுபம் கெர் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வளர்ந்து வரும் நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய அவர், தவறுகள் நடக்கும் வரை, ஒருவரால் நடிகராக மாற முடியாது என்று தெரிவித்தார். எந்த ஒரு துறை அல்லது தொழிலைப் போலவும் நடிப்பிற்கும் பயிற்சி என்பது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
“நீங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே எதிரியாக மாறி விடாதீர்கள். உங்களைப் பற்றி இழிவாக சிந்திப்பவர்களுடன் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களைவிட சிறந்தவர்களுடன் நட்பு பாராட்டுங்கள். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும்”, என்பதை வாழ்க்கை தத்துவமாக அவர் குறிப்பிட்டார்.
நாடகம் மற்றும் திரைப்பட நடிப்பின் வேறுபாடு குறித்து பேசுகையில், “நாடகத்தில், பார்வையாளர்களைப் பொருத்து உங்கள் செயல்பாடுகளை நீங்கள் மாற்ற வேண்டி இருக்கும். அதற்கு 40 நாட்கள் ஒத்திகை பார்க்க வேண்டும்.” தவறு நேர்ந்து விட்டால் திரைப்படத்தைப் போன்று நாடகத்தில் மீண்டும் நடிக்க இயலாது, அதனால்தான் திரைப்படத்தை ஏராளமானோர்
* * *
(Release ID: 1878395)
SRI/RB/RR
(Release ID: 1878448)