தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சத்யஜித் ரேக்கு பணிவான மரியாதை : அடில் ஹுசைன்
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட தி ஸ்டோரிடெல்லர் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர், இன்று கலந்துரையாடல் நடத்தினர்.அதில் பேசிய நடிகர் அடில் ஹுசைன்,
இந்திய சினிமாவின் பிதாமகரான சத்யஜித் ரேக்கு தி ஸ்டோரி டெல்லர் பணிவான மரியாதையைச் செலுத்துவதாக கூறினார். படம் பற்றி ஊடகங்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு விளக்கமளிக்கையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அடில், இந்தப் படம் பழம்பெரும் திரைப்பட இயக்குநரும் கதைசொல்லியுமான சத்யஜித் ரேயின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
"ஒரு கலைஞனுக்கு கலை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன், ஆனால் இன்றைய உலகில், ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் நிறைய வணிக நோக்கு உள்ளது. எதுவும் இலவசமாக கிடைக்காது, ஒருவரின் படைப்பின் அசல் தன்மையை மதிக்க வேண்டியது கலைஞர் சமூகத்தின் பொறுப்பாகும். தற்போது சினிமாவில் மட்டுமல்லாமல் , அனைத்து துறைகளிலும் திருட்டைத் தவிர்க்க பதிப்புரிமை என்பது சவாலான பிரச்சினையாக உள்ளது என நடிகை தனிஷ்தா சாட்டர்ஜி கூறினார்.
தி ஸ்டோரி டெல்லர் (கதைசொல்லி) நேற்று திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அற்புதமான வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் தங்க மயிலுக்காக போட்டியிடுகிறது.
படத்தின் பெயர்: தி ஸ்டோரிடெல்லர்
இயக்குனர்: அனந்த் நாராயண் மகாதேவன்
தயாரிப்பாளர்: குவெஸ்ட் பிலிம்ஸ்
திரைக்கதை: கிரீத் குரானா
ஒளிப்பதிவாளர்: அல்போன்ஸ் ராய்
படத்தொகுப்பு : கவுரவ் கோபால் ஜா
நடிகர்கள்: பரேஷ் ராவல், அடில் ஹுசைன், ரேவதி, தன்னிஷ்தா சாட்டர்ஜி, ஜெயேஷ் மோர்
கதைச்சுருக்கம்
தாரிணி ரஞ்சன் பந்தோபாத்யாய், ஒரு சிறந்த கதைசொல்லி, எந்த வேலையிலும் ஒட்டாமல் தனது வாழ்க்கையை கழித்து வருபவர். இப்போது 60 வயதில், கொல்கத்தாவில் ஓய்வாக இருப்பவருக்கு ஒரே வருத்தம். அவரது மறைந்த மனைவி அனுராதாவுக்கு அவள் எப்போதும் விரும்பிய விடுமுறையைக் கொடுக்க அவரால் ஒருபோதும் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை. இப்போது திடீரென்று, வேலையின்றி, அவருக்கு உலகில் எல்லா நேரமும் இருக்கிறது, ஆனால் அவருக்கு அருகில் இருப்பவர்கள் அவருக்கு நெருக்கமாக இல்லை.
**************
PKV/KRS
(Release ID: 1878080)
Visitor Counter : 189