தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் கலைஞர்கள் பங்குபெறும் '75 நாளைய இளம் படைப்பாளர்கள்’ போட்டி கோவாவில் திங்கட்கிழமை துவக்கம்
75 இளம் படைப்பாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் தருணம் இது. ‘75 நாளைய இளம் படைப்பாளர்கள்' என்ற போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளைஞர்கள் நாளை (நவம்பர் 21, 2022) தொடங்க உள்ள “53 மணி நேர சவாலில்” 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு பிரித்து போட்டியிடுவர். இந்தப் போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கோவாவில் தொடங்கி வைப்பார். தேர்வு செய்யப்பட்ட 18-35 வயது பிரிவிலான இளைஞர்கள் இந்தியா@100 என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் தங்களது படைப்புகளை குறும்படம் வாயிலாக தயாரிக்க வேண்டும்.
இந்தப் போட்டி குறித்து 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க கடந்த ஆண்டு இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். 10 பிரிவுகளில் போட்டியிடுவதற்காக 1000 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, பின்னணி பாடல், இசையமைப்பு, ஆடை மற்றும் அலங்காரம், கலை வடிவமைப்பு, இயங்குபடம், சிறப்பு ஒளியமைப்புகள் போன்ற திரைப்பட தயாரிப்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 75 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தம் 19 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்களுள் அதிகபட்சமாக 23 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து 9 பேர் தமிழகத்திலிருந்தும், 6 பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877587
**************
(Release ID: 1877587)
Sri/RB/RR
(Release ID: 1877677)