அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் தகவலைப் பரப்புவதற்கான பொறுப்பை விஞ்ஞானிகள் ஏற்க வேண்டும்: பேராசிரியர் ரஞ்சனா

Posted On: 20 NOV 2022 4:23PM by PIB Chennai

“அறிவியல் தகவலை விஞ்ஞானிகள் பரப்பாவிட்டால் , வல்லுநர் அல்லாதவர்கள் பரப்பத் தொடங்குவார்கள், பின்னர் தவறான தகவல்களும் அரைகுறையான தகவல்களும் மேகக் கூட்டம்போல் பரவிவிடும். எனவே அறிவியல் தகவல்தொடர்புகளின் குறிப்பிடத்தக்க வேலையில் நமது விஞ்ஞானிகளை ஈடுபடுத்துவது அவசியம்” என்று சிஎஸ்ஐஆர் - தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவன (என்ஐஎஸ்சிபிஆர்) இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் தெரிவித்துள்ளார். சிஎஸ்ஐஆர், என்ஐஎஸ்சிபிஆர் இணைந்து 2022, நவம்பர் 16 அன்று ஏற்பாடு செய்திருந்த சுகாதாரத் தகவல் குறித்த தொடர்பு அமர்வைத் தொடங்கிவைத்து அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அண்மைக் காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாம்  நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம், அந்த நிச்சயமற்ற நாட்களில் அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களை ஒழிப்பதில் அறிவியல் தொடர்பு எவ்வாறு மிக முக்கியப் பங்காற்றியது என்பதை நாம் பார்த்தோம் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஐசிஎம்ஆர்-ன் பல்வேறு ஆய்வகங்களைச் சேர்ந்த  30 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

*********

MSV/SMB/DL


(Release ID: 1877545) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi