தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பியர் பாவ்லோ பசோலினியின் சர்ச்சைக்குள்ளான படைப்பு நூற்றாண்டு காண்கிறது!
சிறப்புவாய்ந்த இத்தாலியத் திரைப்படக் கலைஞருக்கு 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) அஞ்சலி செலுத்துகிறது
பியர் பாவ்லோ பசோலினியின் சர்ச்சைக்குள்ளான படைப்பு நூற்றாண்டு காண்கிறது. சிறப்புவாய்ந்த இத்தாலியத் திரைப்படக் கலைஞருக்கு 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) அஞ்சலி செலுத்துகிறது.
19 வயதிலேயே கவிஞராக அறியப்பட்ட அவர், 1954 இல் தனது முதல் திரைக்கதை எழுதும் முன்பே நாவல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அவரது முதல் படைப்பான ‘அக்காட்டோன்’ (1961) அவரது சொந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது. அவரின் படைப்பில் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தது என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
'ஓடிபஸ் ரெக்ஸ்' (1967); 'தி டெகாமரோன்' (1971); ‘பிக்ஸ்டி’, ‘தி ஹாக்ஸ் அண்ட் தி ஸ்பாரோ’, ‘தி கொஸ்பெல் ஆக்கார்டிங்க் டூ செயின்ட் மேத்யு’, ‘தி கேன்டர்பரி டேல்ஸ்’ (1972) மற்றும் ‘அரேபியன் நைட்ஸ்’ (1974) போன்ற அவரின் சில படைப்புகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த சிறப்புவாய்ந்த இத்தாலியத் திரைப்படக் கலைஞரின் படைப்புகள், 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஐ) திரையிடப்படுகின்றது.
*********
MSV/GS/DL
(Release ID: 1877505)
Visitor Counter : 160