தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழா புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஜீன்-லூக் கோடார்டின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை காட்சிப்படுத்துகிறது
இந்திய சர்வதேச திரைப்பட விழா - 53 புகழ்பெற்ற பிரெஞ்சு-சுவிஸ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜீன்-லூக் கோடார்டுக்கு அஞ்சலி செலுத்துகிறது. இந்த சிறந்த திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்பட்ட அற்புத படங்கள் திரையிடப்படுவது இந்த திரைப்பட விழாவின் முக்கிய அம்சம் ஆகும்.
ஆசியாவின் பழமையான திரைப்பட விழாவின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக பிரெஞ்சு சினிமாவின் கொண்டாட்டமும் உள்ளது, பிரான்ஸ் கவனம் செலுத்தும் நாடாக கருதப்படுகிறது. கோடார்ட் பிரெஞ்சு சினிமாவின் முன்னோடி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. போருக்குப் பிந்தைய காலத்தில் அவர் மிகவும் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு திரைப்படத் இயக்குனராக இருந்தார்.
செல்வாக்கு மிக்க பத்திரிகையான செயர்ஸ் டு சினிமாவின் (Cahiers du Cinema)திரைப்பட விமர்சகராக இருந்த அவரது ஆரம்ப நாட்களில், கோடார்ட் பிரதான பிரெஞ்சு சினிமாவின் ‘பாரம்பரிய தரத்தை’ விமர்சித்தார். இது புதுமை மற்றும் பரிசோதனையை வலியுறுத்தவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலாக, அவரும் ஒத்த கருத்துடைய விமர்சகர்களும் தங்கள் சொந்த திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினர். பிரெஞ்சு சினிமாவைத் தவிர பாரம்பரிய ஹாலிவுடின் மரபுகளுக்கும் சவால் விடுத்தனர். அவரது பணி அடிக்கடி மரியாதை செலுத்தும் வகையிலும் மற்றும் திரைப்பட வரலாற்றின் குறிப்புகளைப் பயன்படுத்தியாதகும் இருந்தது. மேலும் அடிக்கடி விமர்சிக்கப்படும் கருத்துகளை அவரது படைப்புகள் வெளிப்படுத்தியது. இந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி உலகம் இந்த மேதையை இழந்தது.
*********
MSV/SMB/DL
(रिलीज़ आईडी: 1877376)
आगंतुक पटल : 212