தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்படத் தொழிலில் துறையில் புதிய எல்லைகளைக் கண்டறிவதற்கான திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சி

கோவாவில் நாளை  முதல் வரும்  28 ந்தேதி  வரை நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா 2022, இந்த ஆண்டு திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் திரைப்படக் கலை/சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கூறுகளைப் பறைசாற்றும்  ஒரு கண்காட்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கலா அகாடமிக்கு அருகில் உள்ள டிபி சாலையில் உள்ள கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அளவுகளில் 20 அரங்குகள் இடம்பெறும்.

சோனி, கேனான், ரெட், லைக்கா, அல்டாஸ், டிஜோ, அபுச்சர் லைட்ஸ், ஹன்சா சினி எக்யூப்மென்ட் போன்ற முன்னணி சினிமா உபகரண உற்பத்தியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இக்கண்காட்சியானது சமகால சினிமா தயாரிப்பில் தொழில் வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களை காட்சிப்படுத்தும். கண்காட்சி அரங்கில் கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு அமர்வுகளுக்கான பிரத்யேக இடங்களும் இருக்கும்.

 

*********

MSV/PKV/DL

iffi reel

(Release ID: 1877356) Visitor Counter : 181