இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்கேரியாவில் உயரமான இடத்தில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் நிதியுதவி

Posted On: 16 NOV 2022 4:48PM by PIB Chennai

கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள  இடமான பல்கேரியாவின் பெல்மிகினில் பயிற்சி பெறவேண்டும் என்ற மல்யுத்த வீராங்கனை  வினேஷ் போகத்தின் கோரிக்கைக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் செரஃபிம் பாசர்கோ தலைமையின் கீழ், தமது உடலியக்க நிபுணர் அஷ்வினி படேலுடன் வினேஷ் கலந்து கொள்கிறார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் வினேஷ் மற்றும் அவருடைய உடல நல நிபுணருக்கான விமானப்பயணக் கட்டணம், தங்குமிடம், உள்ளூர் பயணம் ,உணவு செலவு உள்ளிட்டவற்றிற்கு நிதி அளிக்கப்படுகிறது.  இதர செலவுக்காக நாள் ஒன்றுக்கு 50 டாலர் படியாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876492

----- 

SMB/IR/KPG/KRS


(Release ID: 1876556) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi