பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
‘வறுமை இல்லாத மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதார கிராம பஞ்சாயத்துகள்’ என்ற கருப்பொருள் 1-ன் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்த மூன்று நாள் தேசிய பயிலரங்கம் நாளை கொச்சியில் தொடங்குகிறது
Posted On:
13 NOV 2022 1:10PM by PIB Chennai
வறுமை இல்லாத மற்றும் மேம்பட்ட வாழ்வாதார கிராம பஞ்சாயத்துகள் என்ற கருப்பொருள் 1-ன் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்த மூன்று நாள் (நவம்பர் 14 - 16, 2022) தேசியப் பயிலரங்கிற்கு கேரளாவின் கொச்சியில் உள்ள சிஐஏஎல் மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள அரசின் உள்ளாட்சித் துறை, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள உள்ளூர் நிர்வாகக் கழகம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்புடன் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நன்கு கட்டமைக்கப்பட்ட இந்தப் பயிலரங்கம் (1) விளிம்புநிலையாக்கம், அனைவரையும் உள்ளடக்குதல், அடிப்படை சேவைகள், சமூகப் பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை எளிதில் அணுகுவதாக்குதல், பஞ்சாயத்துகள் மூலம், தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் தேசிய அளவிலான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது (2) வாழ்வாதாரங்கள் - வருமான சமத்துவமின்மை மற்றும் வறுமையை சரி செய்வதில் பஞ்சாயத்துகளின் பங்கு, தீவிர வறுமையை ஒழித்தல் மற்றும் ஏழைகள்,பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் (3) பேரழிவுகள் மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் திடீர் அதிர்வுகளுக்கு எதிராக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் உறுதி என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுனில் குமார், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா உள்ளிட்ட மத்திய அரசின் செயலாளர்கள், மத்திய - மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளுக்குத் தலைமை தாங்குவார்கள்.
நாடு முழுவதிலுமிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த தேசியப் பயிலரங்கில் கலந்துகொள்வார்கள். கருப்பொருள் சார்ந்த பகுதிகளில் முன்முயற்சி எடுத்த பஞ்சாயத்துகள் பயிலரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. தேசியப் பயிலரங்கில் சுமார் 1500 பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள முதல்வர் திரு பினராயி விஜயன், 2022, நவம்பர் 14 அன்று தேசிய பயிலரங்கைக் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைப்பார். தொடக்க அமர்வில் ‘பஞ்சாயத்துகளில் எஸ்டிஜி உள்ளூர்மயமாக்கல் குறித்த கேரள மாநிலத் திட்டம்’ மற்றும் ‘ஏழைகளின் பங்கேற்புடன் தீவிர வறுமை மதிப்பீடு: கேரளாவின் அனுபவங்கள்’ நூல் வெளியிடப்படும்.
அதே நாளில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல், மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு வி.முரளீதரன், கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எம்.பி. ராஜேஷ் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர்.
****
MSV/SMB/DL
(Release ID: 1875619)
Visitor Counter : 259