பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா- சிங்கப்பூர் இடையே கூட்டு விமானப்படை போர்ப்பயிற்சி கலைக்குந்தாவில் தொடக்கம்

Posted On: 04 NOV 2022 5:16PM by PIB Chennai

இந்திய விமானப்படைக்கும், சிங்கப்பூர் விமானப்படைக்கும் இடையேயான 11வது கூட்டு போர்ப்பயிற்சி கலைக்குந்தாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நவம்பர் 3ம் தேதி தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரு நாட்டு விமானப்படைகளும் நவீன விமான சாகச பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

இதில் இந்திய விமானப்படையின் எஸ்யு-  30 எம்கேஐ, ஜாக்குவார், எம்ஐஜி-29, இலகு ரக தேஜாஸ் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்கின்றன.  சிங்கப்பூர் விமானப்படை சார்பில் எப்-16, விமானம் பங்கேற்றுள்ளது.

**************

SM/PLM/RS/IDS



(Release ID: 1873788) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi