அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சென்னை ஐஐடி-யால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன உராய்வு மற்றும் சமப்படுத்தும் கருவிகளை உருவாக்க முடியும்
Posted On:
03 NOV 2022 1:56PM by PIB Chennai
சென்னை ஐஐடி-யால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே அடுக்கிலான பலமுனைகள் கொண்ட அதிநவீன உராய்வு மற்றும் சமப்படுத்தும் கருவிகளை உருவாக்க முடியும். இந்த வகையிலான கருவிகள் நீண்டகாலம் உழைக்கக்கூடிய தன்மையை கொண்டதாகவும் அமைந்திருக்கும். உலோக அரவை, உராய்வு மற்றும் சமப்படுத்தும் தொழில்களை சேர்ந்த நிறுவனங்கள், உள்ளூர் தேவைக்கேற்ப இதற்கான கருவிகளை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து சென்னை ஐஐடி-யை சேர்ந்த டாக்டர் அமிதவா கோஷ் தலைமையிலான குழு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டது. இந்தக்குழு உராய்வு கருவிகளில் தேவைக்கேற்ப மேற்பூச்சுகளை பூசி நவீன கருவிகளை உருவாக்கலாம் என பரிந்துரைத்தது. இந்த புதிய நடைமுறை வலுவான தன்மை, ஈரப்பதத்திற்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கொண்டதாக அமைந்திருக்கும்.
இந்த புதிய கருவிகள் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் விமானம், வாகனப் போக்குவரத்து, சுரங்கம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.
**************
SM/PLM/PK/IDS
(Release ID: 1873513)