பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிரதமர் திரு மோடியின் ஆட்சி முறை எதிர்காலத்திலும் நீடித்து, நிலைத்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும் : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
29 OCT 2022 5:45PM by PIB Chennai
கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சி (மாடல்) முறை, எதிர்காலத்திலும் நிலைத்து, உலகின் மற்ற நாடுகளைக்காட்டிலும் இந்தியா முன்னிலை அடையும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணு ஆற்றல் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ரத்தினச்சுருக்கமாக 20 வயதில் மோடி 2047ஆம் ஆண்டு இந்தியாவிற்கான அடித்தளம் அமைத்திருக்கிறார் என்று அர்த்தம் என்றார்.
சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் “மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், “மோடி@20” –யின் சாராம்சத்தையும், உணர்வையும் புரிந்து கொள்ள, புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றார்.
இந்த ஆண்டு மே மாதம் பிரதமர் திரு மோடி தமிழ் நாட்டிற்கு வந்ததைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இம்மாநிலத்தில் சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், தமிழை மேலும் பிரபலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் வெளிப்படுத்தினார் என்றார்.
தமிழகம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்றும், தமிழ் மொழி நிரந்தரமானது என்றும், அதன் கலாச்சாரம் உலகளாவியது என்றும் பிரதமர் திரு மோடி பாராட்டியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழ் மொழியின் சிறப்பை புகழ்ந்து, தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிரபலமான கவிதையை மேற்கோள்காட்டிய திரு மோடி, ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரோ ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்று கூறினார்.
மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" என்பது மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, திரு எஸ் ஜெய்சங்கர், திரு அமிஷ் திரிபாதி, பிவி சிந்து, திரு அனுபம் கெர், சுதா மூர்த்தி மற்றும் பலர் எழுதிய அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
"மோடி @20..." புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல அத்தியாயங்களில் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஜனநாயகம், விநியோகம் மற்றும் நம்பிக்கையின் அரசியல்" என்ற தலைப்பில் திரு அமித் ஷா எழுதிய அத்தியாயத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் அவநம்பிக்கையை நம்பிக்கையுடன் மாற்றுவதை விளக்கினார்.
திரு மோடி தலைமையின் கீழ் லட்சிய இந்தியா எழுச்சி பெற்றதை சுதா மூர்த்தியின் அத்தியாயம் விளக்குகிறது என்றும் லதா மங்கேஷ்கரின் அத்தியாயம் திரு மோடியின் தனிப்பட்ட திறனை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளின் முதல் பகுதியில் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை என்றும், உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிது என்றும் அவர் கூறினார்.
“கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கும் முதல்வர் என்ற அரிதான நிகழ்வையும் திரு மோடி ஏற்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, 2002-ல் மோடி முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசு அல்லது நிர்வாகத்தில் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. மேலும் கடந்த காலங்களில் அவர் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது மிகப்பெரிய தனிச்சிறப்பு” என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:
*********
(Release ID: 1871874)
Visitor Counter : 140