அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எஸ்.டி.என்-1 மற்றும் 2 வகைகளின் கீழ் உள்ள மரபணு திருத்தப்பட்ட தாவரங்களின் ஒழுங்குமுறை திறனாய்வுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், 2022 வெளியீடு
Posted On:
27 OCT 2022 10:32AM by PIB Chennai
புதிய மூலக்கூறு தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் சாத்திய செயல்பாடுகளினால் நவீன உயிரி தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. மரபணு திருத்தப்பட்ட தாவரம் என்பது பல்வேறு துறைகளில் அபரிமிதமான பொருளாதார சாதிய கூறுகளுடன் கூடிய உயிரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சம்பந்தமான தொழில்நுட்பங்களுள் ஒன்று. இது போன்ற தாவரங்களின் பாதுகாப்பான மதிப்பீட்டிற்கு வழிமுறைகளை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான பணியை விரிவான ஆலோசனைகளின் வாயிலாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத்துறை தொடங்கியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986- இல் விதிகள் 1989-இன் ஆணைகள் 7 முதல் 11 வரை மரபணு திருத்தப்பட்ட தாவரங்களின் எஸ்.டி.என் (SDN)-1 மற்றும் 2 வகைகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து மார்ச் 30, 2022 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து ஏப்ரல் 28, 2022 அன்று நடைபெற்ற மரபணு மாற்றத்திற்கான ஆய்வுக் குழுவின் 231-வது கூட்டத்தில் மாதிரி வழிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பிறகு மே 17, 2022 அன்று ‘மரபணு திருத்தப்பட்ட தாவரங்களின் பாதுகாப்பான மதிப்பீட்டுக்கு வழிமுறைகள், 2022’ அரசிதழில் வெளியிடப்பட்டது.
நிறுவன உயிரி பாதுகாப்பு குழுக்களால் உயிரி பாதுகாப்பு ஒழுங்குமுறை செயல்படுத்தப்படுவதற்காக, அனைத்து பங்குதாரர்களிடையே புரிதலை ஏற்படுத்துவதற்காக, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும், சரிபார்ப்பு பட்டியலும் தயாரிக்கப்பட்டன. மரபணு மாற்றத்திற்கான ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அக்டோபர் 4, 2022 அன்று ‘எஸ்.டி.என்-1 மற்றும் 2 வகைகளின் கீழ் உள்ள மரபணு திருத்தப்பட்ட தாவரங்களின் ஒழுங்குமுறை திறனாய்வுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், 2022’ வெளியானது.
வேளாண் துறையில் மரபணு திருத்தம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டுதல்களும், நடைமுறைகளும் விலைமதிப்பில்லாத ஆவணமாகத் திகழும். இதன்மூலம் தாவர வகைகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுவதுடன், ஒப்புதல் அளிப்பதற்கான நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமல்லாது, இந்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதிலும் இந்த முயற்சி மிகப் பெரிய பங்கு வகிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871153
(Release ID: 1871153)
*******
MSV/RB/SHA
(Release ID: 1871209)