பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இரண்டாம் கட்ட முகாமின் முக்கிய அம்சங்கள்

Posted On: 26 OCT 2022 12:53PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாமை அக்டோபர் 2, 2022-லிருந்து அக்டோபர் 31, 2022 வரை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நடத்தி வருகிறது.  இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய வளாகம் மற்றும் நாயக் பவன், வடக்கு பிளாக்கில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. அத்துடன் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள அரசியல் சட்டப்படியான அமைப்பு, சட்டப்பூர்வ அமைப்பு, தன்னாட்சி அமைப்பு உள்ளிட்ட 16 அமைப்புகளின் அலுவலகங்களில் இப்பணிகள் நடைபெற்றன.

இரண்டாம் கட்ட சிறப்பு இயக்கத்தின் கீழ் வடக்கு பிளாக்கில் உள்ள அலுவலக வளாகங்களில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி மற்றும் நிர்வாகப் பிரிவு கூடுதல் செயலாளர் திருமதி. ராஷ்மி சௌத்ரி தலைமை தாங்கினார்.

இப்பணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பரிந்துரைகள், அமைச்சரவை பரிந்துரை செய்து நிலுவையில் இருந்தவை ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. பொதுமக்கள் குறை தீர்ப்பு எண்ணிக்கை 951-லிருந்து 341 ஆக குறைக்கப்பட்டது. அத்துடன் 48,300 கோப்புகளை ஆய்வு செய்ததில், 30,720 கோப்புகள் களையப்பட்டது. இதன் மூலம் 3,058 சதுர அடி பரப்பளவு காலியானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870914

**************



(Release ID: 1870955) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Telugu