புவி அறிவியல் அமைச்சகம்
2022 அக்டோபர் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள் பகுதி நேர சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது
Posted On:
18 OCT 2022 4:38PM by PIB Chennai
பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25-ஆம் தேதி (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) நிகழும். இந்தியாவில் சூரிய கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கி பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படும். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது.
அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும்.
கிரகணத்தின் உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868856
**************
KG/ANA/SHA
(Release ID: 1868901)
Visitor Counter : 5723