சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அதிக போக்குவரத்து நெரிசலுள்ள மாநில நெடுஞ்சாலைகளை மாநிலங்களிடமிருந்து கையகப்படுத்தி, 4 அல்லது 6 வழிச்சாலைகளை உருவாக்கவும், பின்னர் 12-13 ஆண்டுகளுக்குள் சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது: நிதின் கட்கரி

Posted On: 15 OCT 2022 6:12PM by PIB Chennai

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் பின்னர் இந்த மாநில நெடுஞ்சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்.  மும்பையில் இன்று நடைபெற்ற  இந்திய தேசிய உறுப்பினர்கள் பரிமாற்ற சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இதனைத் தெரிவித்தார். 12-13 ஆண்டுகளுக்குப் பின் இந்த மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து வட்டி மற்றும் நிலம் கையகப்படுத்தும்  செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக்  கிடைத்துவிடும் என்று திரு கட்கரி மேலும் கூறினார்.

 

இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் வரவிருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்துவிடும்  என்றும் அவர் கூறினார்.  தில்லி -ஜெய்பூர் 2 மணி நேரத்திலும், தில்லி -அமிர்தசரஸ் 4 மணி நேரத்திலும், தில்லி -ஸ்ரீநகர் 8 மணி நேரத்திலும் , தில்லி -மும்பை 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுக்கும்  செயல்பாட்டுக்கு வரும்  என்றும் அவர் தெரிவித்தார்.

SMB/SRI/DHA

******



(Release ID: 1868126) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Hindi , Marathi