நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரம், நிலைத்தன்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள இந்திய தயாரிப்புகளுக்கு மதிப்பை உருவாக்க முடியும் - மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 14 OCT 2022 4:53PM by PIB Chennai

உலக தரநிலைகள் தினத்தையொட்டி, மும்பையில் உள்ள இந்திய தரநிலைகள் பணியகம் இன்று, 'நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - ஒரு சிறந்த உலகத்துக்கான பகிரப்பட்ட பார்வை' என்ற கருப்பொருளில் தரநிலை மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல், தரம் மற்றும் நிலைத்தன்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள இந்திய தயாரிப்புகளுக்கு மதிப்பை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். உலகம் முழுவதும் பிராண்ட் இந்தியா என்ற நிலையை அடைய தரங்களில் மாற்றம் தேவை. மேலும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

2047-ஆம் ஆண்டுக்குள் 130 கோடி இந்தியர்களுடைய பணி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்துவதற்கு தரநிலைகள் மிகவும் முக்கியமானவை என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். தரநிலைகள் என்பது புதிய பெற்றோர்கள். தரநிலைகளை கட்டுப்படுத்துபவர்கள் சந்தைகள், விலைகள், செயல்முறைகள், உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.

பொருட்களின் தரநிலைகளுக்கான அளவுகோலை அமைக்கும்போது, அது வளர்ச்சித் திறனை பிரதிபலிப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். “பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தரநிலைகளை வளர்ச்சியின் முக்கிய தூணாக கருதுகிறது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


(रिलीज़ आईडी: 1867874) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi