வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக பதிவு
Posted On:
14 OCT 2022 12:03PM by PIB Chennai
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 செப்டம்பர் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது.
உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் 9.93% லிருந்து (ஆகஸ்ட், 2022) 8.08%ஆக (செப்டம்பர், 2022) குறைந்தது.
கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
**************
(Release ID: 1867758)
Visitor Counter : 238