சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நமது பாரம்பரியம் திட்டம்

Posted On: 03 AUG 2022 3:49PM by PIB Chennai

இந்தியாவில் சிறுபான்மையின சமூகத்தினரின் வளமான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக “நமது பாரம்பரியம்” திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் என்ற ஒட்டுமொத்த அடிப்படையில், சிறுபான்மையினரின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்த இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கண்காட்சிகளை நடத்துவது, இலக்கியம்/ஆவணங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை நமது பாரம்பரியம் திட்டத்தின்கீழ், சிறுபான்மையினரின் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நமது பாரம்பரியம் திட்டத்தின்கீழ், 2016-17-ம் ஆண்டுமுதல் மேற்கொள்ளப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவு ஆகிய விவரங்களை கீழே காணலாம். (அளவு ரூ.கோடியில்)

 

ஆண்டு

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடு

செலவு

 

2016-17

8.00

6.60

2017-18

12.00

0.64

2018-19

6.00

1.64

2019-20

3.00

0.70

2020-21

5.20

4.55

2021-22

2.00

1.66

 

இந்திய அரசியல்சாசனத்தின் 7-வது அட்டவணைப்படி, பொது நிலைத்தன்மை என்பது மாநில அரசுகளின் பணியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து குடிமக்கள் மற்றும் அவர்களது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்களை பதிவுசெய்வது மற்றும் தண்டனை பெற்றுத்தருவது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாக உள்ளது. சிறுபான்மையினருக்கு சொந்தமான பாரம்பரிய கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக மாநிலங்களிடமிருந்து எந்தவொரு அறிக்கையையும் மத்திய அரசு பெறவில்லை.

இந்தத் தகவல்களை, மாநிலங்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி, இன்று எழுத்து மூலம் அளித்துள்ளார்.

*****

 



(Release ID: 1866848) Visitor Counter : 103


Read this release in: English , Urdu