சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சிறுபான்மையின மகளிருக்கான நல்வாழ்வு திட்டங்கள்

Posted On: 28 JUL 2022 6:32PM by PIB Chennai

அறிவிக்கை செய்யப்பட்ட 6 சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த மகளிர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டிற்காக சிறுபான்மையினர் உறவுகள் அமைச்சகம் செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன:

1. புதிய ஒளி – அறிவு, தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் ஆகியவற்றை வழங்குகின்ற வகையில் இந்த தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சித் திட்டம் சிறுபான்மையின மகளிருக்காக செயல்படுத்தப்படுகிறது.

2. புதிய உச்சம் – உலக வங்கியின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் தொழில்திறன் மேம்பாட்டிற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள், முறைசார் கல்வி பயிலாதவர்கள் இந்தத் திட்டத்தின் வாயிலாக பயன்பெற முடியும். பயனாளிகளில் 30 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.

3. கற்றல் மற்றும் ஈதல்– இதுவும் தொழில்திறன் மேம்பாட்டிற்கான ஒரு திட்டம் ஆகும்.

4. உஸ்த்தாத் - பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பாதுகாப்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

5. புதிய விடியல் – சிறுபான்மையினத்தைச் சேர்த்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நிதி உதவி அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

6. புதிய சிறகுகள்– யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் ஆரம்பகட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைநிலைத் தேர்வு எழுத நிதிஉதவி அளிக்கப்படுகிறது.

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

*****(Release ID: 1866844) Visitor Counter : 118


Read this release in: English , Urdu