சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

வக்ஃப் வாரிய சொத்துக்கள்

Posted On: 28 JUL 2022 6:32PM by PIB Chennai

ஷஹாரி வக்ஃப் சம்பட்டி விகாஸ் திட்டத்தின்கீழ் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு மானிய உதவி அளித்து வருகிறதுஇந்தத் திட்டத்தின்கீழ் மாநில வக்ஃப் வாரியங்கள் / வக்ஃப் கல்வி நிலையங்கள் நகரப் பகுதிகளில் வர்த்தக வளாகங்கள், திருமணக்கூடங்கள், மருத்துவமனைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாட்டில் உள்ள பல்வேறு வக்ஃப் வாரியங்கள் / வக்ஃப் கல்வி நிலையங்களுக்கு ரூ.71.54 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது

வக்ஃப் வாரிய சொத்துக்களை அத்துமீறி பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணி குவாமி வக்ஃப் வாரிய தரக்கியாட்டி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுஇதுவரை 8 லட்சத்தி 33 ஆயிரத்து 558 அசையா வக்ஃப் வாரிய சொத்துக்களின் ஆவணங்கள் வக்ஃப் சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,92,106 வக்ஃப் வாரிய சொத்துக்கள் ஜி..எஸ் மேப்பிங் செய்யப்பட்டு உள்ளன.        

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

 

*****

 



(Release ID: 1866840) Visitor Counter : 109


Read this release in: English , Urdu