சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தேசிய சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் திரு இக்பால் சிங் லால்புரா புதுதில்லியில் ஆணையத்தின் கூட்டத்தை நடத்தினார்.
317 புகார்களை என்சிஎம் தீர்த்து வைத்துள்ளது: ஜுன் 30, 2022 முதல் 20 செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் 13 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
21 SEP 2022 6:54PM by PIB Chennai
தேசிய சிறுபான்மை ஆணையத்தின் மாதாந்திரக் கூட்டம் இன்று புதுதில்லியில் அதன் தலைவர் திரு இக்பால் சிங் லால்புரா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அனைத்து மூத்த அதிகாரிகளுடன் ஆணையத்தின் துணைத்தலைவரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின்போது ஆணையம் தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
30 ஜுன் 2022 முதல் 20 செப்டம்பர் 2022 வரை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் 511 புகார்களைப் பெற்றுள்ளது. இதில் 317 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 194 புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில் தேசிய சிறுபான்மையின ஆணையம் 13 புகார்களை நேரிடையாக விசாரித்து உரிய வழிமுறைகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.
இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(रिलीज़ आईडी: 1866836)
आगंतुक पटल : 461