சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினருக்கான பிரதமரின் புதிய நலத் திட்டம்

प्रविष्टि तिथि: 04 AUG 2022 6:03PM by PIB Chennai

சிறுபான்மையினரின் நலனுக்காக பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தை சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இது மத்திய அளவில் அறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மை சமூகத்தில் உள்ள பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்கள் சமமான அளவில் கிடைக்கச் செய்யவும், நாட்டின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பை செய்வதை உறுதிப்படுத்தவும் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள்/முயற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தத் திட்டம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருக்கும்.

  1. கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல்
  2. ஏற்கனவே உள்ள மற்றும் புதிய திட்டங்கள், சுயவேலைவாய்ப்புக்கான கடன் வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்க்கை வாய்ப்பு ஆகியவற்றின்மூலம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமமான பங்கை உறுதிப்படுத்துதல்
  3. கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் சிறுபான்மையினருக்கு உரிய பங்களிப்பை கிடைக்கச் செய்து, சிறுபான்மையினரின் வாழ்க்கை சூழலை மேம்படுத்துதல்
  4. மத நல்லிணக்கமின்மை மற்றும் வன்முறையை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல்.

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் 15 அம்சத் திட்டமானது, அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமானது. திட்டத்தின் விவரங்கள் கீழ்க்கண்டவாறு:

  • கல்வி மேம்பாடு
  • பொருளாதார மேம்பாடு

அ. திறனை மேம்படுத்துதல்

ஆ. அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தேசிய சிறுபான்மை மேம்பாட்டு நிதிக் கழகத்தின் சலுகை கடன்கள்

இ. முன்னுரிமை துறை அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்குதல்

ஈ. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

உ. தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்

ஊ. தீனதயாள் உபாத்யாய்- கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம்

எ. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்

இந்தத் தகவல்களை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துமூலம் இன்று அளித்தார்.

*****


(रिलीज़ आईडी: 1866833) आगंतुक पटल : 774
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu