சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற முஸ்லீம்கள்
Posted On:
28 JUL 2022 6:31PM by PIB Chennai
சிறுபான்மையினருக்கான பிரத்யேக வறுமை மதிப்பீட்டை அரசு செய்திருக்கவில்லை. சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாய பிரிவினரின் நல்வாழ்விற்காகவும் மேம்பாட்டிற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றிற்காக பொருளாதாரரீதியில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த சிறுபான்மையினருக்கு உதவும் வகையில் இந்த திட்டங்களை சிறுமான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
பல்வேறு திட்டங்களுக்காக இந்த அமைச்சகம் ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
2019-20ல் ரூ.4700 கோடி (திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி), 2020-21ல் ரூ. 4005 கோடி (திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி), 2021-21ல் ரூ.4346.45 கோடி (திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி), மற்றும் 2022-23ல் ரூ.5020.50 கோடி (பட்ஜெட் மதிப்பீட்டின்படி) ஒதுக்கப்பட்டு உள்ளன. 2022-23ல் பிரதம மந்திரி ஜன்விகாஸ் காரியகிரம் திட்டத்திற்கு ரூ.1,650 கோடி மெட்ரிக் படிப்பிற்கு முன்பான கல்வித்தொகைக்கு ரூ.1,425 கோடி மெட்ரிக் படிப்பிற்கு பின்பான கல்வித்தொகைக்கு ரூ.515 கோடி தகுதி மற்றும் வாழ்நிலை அடிப்படையிலான கல்வித்தொகைக்கு ரூ.365 கோடி, தொழில்திறன் மேம்பாட்டிற்காக ரூ.235.41 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
*****
(Release ID: 1866808)
Visitor Counter : 167