சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

பட்ஜெட் ஒதுக்கீட்டில் குறைப்பு

Posted On: 21 JUL 2022 3:15PM by PIB Chennai

இலவச தடுப்பூசி, பிரதமர் கரீப் கல்யாண் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களின் வாயிலாக சிறுபான்மையினர் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் இந்திய அரசு பல்வேறு நல்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், சமணர் மற்றும் பார்சி ஆகிய 6 சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

2017-18 முதல் 2021-22 வரை வழங்கப்பட்ட மேற்சொன்ன கல்வி உதவித்தொகைகளின் பட்டியல்

வருடம்

மொத்தம்

2017-18

62,43,648

2018-19

66,94,890

2019-20

67,25,802

2020-21

62,74,683

2021-22*

67,28,951

 

பின்னிணைப்பு

 

மெட்ரிக் படிப்பிற்கு முன்பான கல்வி உதவித்தொகை

 

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சேர்க்கைக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.500, கல்விக் கட்டணம் மாதம் ரூ.350 என மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

மெட்ரிக் படிப்பிற்கு பின்பான கல்வி உதவித்தொகை

 

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு அதிகபட்சம் ரூ.7,000 வழங்கப்படுகிறது.  இதே தொழில்கல்வி வகுப்பில் சேர்வது என்றால் ஓராண்டிற்கு அதிகபட்சம் ரூ.10,000 வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.380 என ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது,

 

தகுதி மற்றும் வாழ்நிலை அடிப்படையிலான கல்வி உதவித்தொகை

 

கல்விகட்டணம் ஓராண்டிற்கு ரூ.20,000 அல்லது  செலுத்தப்பட்ட கட்டணம் இதில் எந்தக் கட்டணம் குறைவோ அது வழங்கப்படுகிறது.  10 மாதங்களுக்கு பராமரிப்புக் கட்டணம் ஹாஸ்டல் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதமும் வீட்டில் இருந்து வந்து செல்பவர்களுக்கு மாதம் ரூ.500-ம் வழங்கப்படுகிறது. 

பேகம் அஸ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை

 

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.5,000மும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6,000மும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

 

மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை

 

ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் வீதமும் மீதியுள்ள காலகட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.35 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

 

*****

 



(Release ID: 1866806) Visitor Counter : 87


Read this release in: English , Urdu