சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 04 AUG 2022 6:07PM by PIB Chennai

தேசிய சிறுபான்மை ஆணைய சட்டத்தின்கீழ் புத்தமதம், கிருஸ்துவம், சமணம், பார்சி, சீக்கியமதம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்  சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கான  அமைச்சகத்தால், அமல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்கள்:-

கல்வி அதிகாரம் அளித்தல் திட்டம்

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள  சிறுபான்மை சமுதாய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணாக்கர்களுக்கு கடந்த 2008-09 ஆண்டிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீத நிதியுதவி மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சிறுபான்மை சமுதாய குடும்பத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு முதல் பிஎச்டி வரை பயிலக்கூடிய மாணாக்கர்களுக்கு கடந்த 2007-08 ம் ஆண்டிலிருந்து கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதில் 30 சதவீத நிதியுதவி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 2.50 லட்சத்திற்கு கீழே உள்ள சிறுபான்மை சமுதாய குடும்பத்தைச் சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு நிலையிலான தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மை சமுதாய குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீத நிதியுதவி மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.  

இத்தகவலை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

--------------


(रिलीज़ आईडी: 1866804) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu