சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நலத்திட்டங்கள்

Posted On: 04 AUG 2022 6:02PM by PIB Chennai

சிறுபான்மையினர் உட்பட சமுகத்தின் அனைத்து பிரிவினரின்  நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக, பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம் பிரதமரின் முத்ரா திட்டம்,  பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் சார்பில் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 6 பிரிவினருக்கு  சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றிற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது.

கல்வி அதிகாரமளித்தல் திட்டங்கள்:-

ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சிறுபான்மை குடும்பத்தைச்சேர்ந்த யுஜிசி- நெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணாக்கர்களுக்கு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை கடந்த 2009-10ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதில் 35 சதவீத நிதியுதவி மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் கல்வி கற்றல் திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சிறுபான்மை சமுதாய குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் மீதான வட்டிக்கு மானியம் அளிக்கப்படுகிறது. இதில் 35 சதவீத நிதியுதவி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் திருமதி ஸமிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார

***************

 

IR/RS/SRI/IDS



(Release ID: 1866754) Visitor Counter : 98


Read this release in: English , Urdu