சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமுதாயத்தினரின் மேம்பாடு

प्रविष्टि तिथि: 28 JUL 2022 6:32PM by PIB Chennai

மத்திய அளவில் அறிவிக்கை செய்யப்பட்ட சிறுபான்மை இனத்தினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பின்னிணைப்பில் தரப்படுகின்றன.  இந்தத் திட்டங்கள் எந்த அளவிற்கு பலன்களைத் தருகிறது என அவ்வப்போது மதிப்பீடும் செய்யப்படுகிறது. 

2017-18 முதல் 2021-22 ஆகிய 5 நிதியாண்டுகளில் சிறுபான்மையினர் உறவுகள் அமைச்சகத்தின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக ரூ.21946.45 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பின்னிணைப்பு

சிறுபான்மையினர் உறவுகள் அமைச்சகம் நடைமுறைப்படுத்திவரும் திட்டங்களின் விவரங்கள்:

 அ. கல்வி அதிகாரம் பெறுவதற்கான திட்டங்கள்: மெட்ரிக் படிப்பிற்கு முன்பான கல்வி உதவித்தொகை திட்டம், மெட்ரிக் படிப்பிற்கு பிறகான கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் தகுதி – வாழ்நிலை அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்காக மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டம், போட்டித் தேர்வுகளில் ஆரம்பகட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியனவும் இதில் உள்ளடங்கும்.

ஆ. வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள்

இந்த அமைச்சகம் செயல்படுத்தி வந்த 5 திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இப்பொழுது பிரதமமந்திரி விகாஸ் யோஜனா என்ற பெருந்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  தொழில்திறன் மேம்பாடு, கல்வி. பயிற்சி, தொழில்முனைவு, சந்தைவாய்ப்பு ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

இ. பிரதமர் மக்கள் வளர்ச்சி என்ற உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈ. சிறப்புத் திட்டங்கள்: ஜியோ பார்சி, குவாமி வக்ஃப் வாரிய தரக்கியாத்தி திட்டம், ஷகாரி வக்ஃப் சம்பட்டி விகாஸ் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன.

இந்த தகவலை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இராணி மக்களவையில் இன்று ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

*****


(रिलीज़ आईडी: 1866720) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu